புலம்பெயர்ந்தோர் தமிழ் எழுத்துக்களில் இரண்டாவது கட்டுரை தொகுப்பு இது.
கட்டுரைகளை கதைகளாக்கவும் கதைகளை கட்டுரைகளாக்கவும் தெரிந்த இலக்கிய வித்தைக்காரன் ஷோபாசக்தியின் இந்நூலில், தமிழ்ச் சமூக மனங்களில் உறைந்திருக்கும் சாதியம், தேசியம், இலக்கியப் போர்வைக்குள் இந்துத்துவம் பேணும் "காலச்சுவடு" வகைகளின் இதழியல் பார்ப்பனியம் போன்ற பாசிசக் கூறுகளை விரிவாக்கவும் கூர்மையாகவும் விமர்சிக்கும் 30 கட்டுரைகளின் தொகுப்பு இது.
ஈழத்தின் வடத் தீவுகளில் ஒன்றான லைடன் தீவின் அல்லைப்பிட்டி கிராமத்தில் பிறந்து தற்போது பிரான்சில் அகதியாக வசித்துவரும் அந்தோனிதாசன் என்கிற ஷோபாசக்தி ‘கொரில்லா (2001)’, ‘ம்’ (2004), BOX (2015) என்கிற மூன்று நாவல்களையும், தேசத்துரோகி (2003)’, எம்.ஜி.ஆர். கொலைவழக்கு (2009), ‘கண்டிவீரன்(2014)’ என்கிற மூன்று சிறுகதைத் தொகுதிகளையும், ‘வேலைக்காரிகளின் புத்தகம (2007)’, ‘முப்பது நிறச் சொல்(2014)’, ‘பஞ்சத்துக்கு புலி(2011)’ ஆகிய மூன்று கட்டுரை தொகுப்புகளையும் வெளியிட்டுள்ளார்.
‘சுவிஸ்’ தேவாவின் மொழிபெயர்ப்பில் வெளியான சைனா கெய்றெற்சியின் ‘குழந்தைப் போராளி (2008)’ நூலுக்கும், தன்வரலாற்று நினைவுக் குறிப்புகளான புஷ்பராணியின் ‘அகாலம் (2012)’ நூலுக்கும், பதிப்பாசிரியராக பணியாற்றியுள்ளார்.
நண்பர் சுகனுடன் இணைந்து இவர் வெளியிட்ட‘சனதரும போதினி (2001)’, ‘கறுப்பு (2002), ஆகிய இரு தொகுப்புகள் பெரும் அதிர்வுகளையும் ஈர்ப்பையும் புலம்பெயர்ச் சூழலில் ஏற்படுத்தியது.
2013-ல் இலங்கையில் நடைப்பெற்ற 41வது இலக்கிய சந்திப்பு நிகழ்விற்கு ஈழம்- புலம்பெயர்ந்த நாடுகள்- தமிழகம் என்கிற விரிந்த புலங்களில் இயங்கும் படைப்பாக்கங்களை ஒருங்கிணைத்து ‘குவர்னிகா’என்கிற தொகுப்பிற்கு பதிப்பாசிரியராக அவர் இருந்தது மிகுந்த தனித்துவமானது.
Be the first to rate this book.