அமைதியற்றவன் நான்.
யாருக்காகவும் எதற்காகவும்
நான் காத்திருக்கவில்லை.
விலைமதிப்பற்ற அமைதியை
நான் குவித்து வைத்திருப்பதாகவும்
யாருக்காகவோ எதற்காகவோ
நான் சதா காத்திருப்பதாகவும்
சில அமைதியற்றவர்கள்
என்னிடம் வந்து சேர்கிறார்கள்.
அனுப்பிவிட்டுக்
கதவைத் தாளிடும் போது
மேலும் கந்தலாகிக் கிடக்கிறது
அறையில் என் அமைதி.
தளர்ந்து படுக்கையில் சாய்ந்து
நீண்ட நாட்களாக வாசித்து
முடிக்காத புத்தகத்தை எடுக்கையில்
மீண்டும் தட்டப்படுகிறது
வாசல் கதவு.
Be the first to rate this book.