வெளிநாட்டு எழுத்து ஜாம்பவான்கள் எல்லாம் கோவில் பட்டியின் தெருக்களில் திரிந்து கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லிவிட்டு, அவர்களின் எழுத்துக்களைப் பற்றி இங்கே காரசாரமாக விவாதித்துக் கொண்டிருப்பதைக் காதுகொடுத்துக் கேட்பதற்காக என்று சொல்லி, கோவில்பட்டி ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பாரம் பெஞ்சில் இரண்டுபேர் இன்னாருடைய எழுத்து பற்றிப் பேசுவதைக் கேட்க அவரே வந்து முன்னும் பின்னுமாக நடந்து கொண்டே கவனிக்கிறார் என்று சொல்வதெல்லாம் ரசமான விசயம். வேற எந்த ஊருக்கும் இப்படி ஒரு பதிவு கிடைத்ததாகத் தெரியவில்லை. கோவில்பட்டி யோகம் செய்ததுதான்.
- கி.ரா.
இந்தப் புத்தகத்தை நீங்கள் வாசித்தால் இப்படி ஒன்றை நாமும் எழுத வேண்டும் என்ற ஆசை துளிர்ப்பது நிச்சயம். ஒவ்வொருவரும் எங்கோ பிறந்து, இடம் பெயர்ந்து, என்னவாகவோ மாறி, புதுப்புது நண்பர்களோடு தனது பயணத்தை தொடர்ந்து கொண்டு இருந்தாலும்... பிறந்த ஊர், நம்முடைய வீட்டுக்கு முதன்முதலாக வந்த நண்பன், ஓசியில் கிடைத்த முதல் புத்தகம், எழுதியதைப் பாராட்டிய முதல் ரசிகன் என்பதெல்லாம் மறக்க முடியாது. அப்படி சில நினைவுகளின் தாழ்வாரம் இது.
- ப.திருமாவேலன்
Be the first to rate this book.