நுண் கதைகள், குறுங்கதைகள், மீச்சிறு கதைகள் என்று பல விதமாக அழைக்கப்பட்டாலும் இக்கதைகளின் பொதுத் தன்மை, இவை ஒவ்வொன்றும் வாழ்வின் ஒரு மகத்தான கணத்தை நிரந்தரப்படுத்திவிடுவதுதான்.
கனவுக்கும் நினைவுக்குமான இடைவெளி, இருப்புக்கும் இல்லாமல் போவதற்குமான இடைவெளி, உருவாக்குவதற்கும் அழித்தொழிப்பதற்குமான இடைவெளி அனைத்தையும் இந்தக் கதைகள் வெகு அநாயாசமாக இல்லாமல் செய்துவிடுகின்றன.
நாவல்களின் காலப் பரப்பையும் சிறுகதைகளின் வடிவக் கச்சிதத்தையும் ஒரு புள்ளியில் இணைக்கும் சாகசத்தைப் பாரா இக்குறுங்கதைகளில் நிகழ்த்திக் காட்டுகிறார்.
Be the first to rate this book.