மொழியியல் அறிஞரான உதயநாராயணசிங், ‘நசிகேத’ என்னும் புனை பெயரில் மைதிலி மொழியில் எழுதிய கவிதைகளின் ஆங்கிலம் வழித் தமிழாக்கம் இது. இத்தொகுப்பில் முப்பத்து மூன்று கவிதைகள் உள்ளன. பெரும்பாலான கவிதைகள் சற்றே நீளமானவை.
தனது இளம் பருவ நினைவுகளாகட்டும் காதல் நினைவுகளாகட்டும் சமூக விமர்சனங்களாகட்டும் அனைத்தையும் ஒரு கவிஞனின் நிலைப்பாட்டில், கவிதையையும் இணைத்துப் பேசுவதாகவே இவரது பெரும்பாலான கவிதைகள் அமைந்துள்ளன. இவ்வகைக் கவிதைகள் சிலவற்றில், கவிதையின் குணாம்சங்களைக் கவித்துவமாகவும் சூசகமாகவும் உணர்த்திச் செல்கிறார் உதயநாராயணசிங்.
Be the first to rate this book.