இயற்கை வேளாண்மை என்ற கரு, உருக்கொண்ட காலகட்டத்தில் பல உழவர்கள் இதில் முன்னோடிகளாக - முன்னத்தி ஏர்களாகக் களம் இறங்கினர். பிழை திருத்தச் சுழற்சியில் அவர்கள் பல்வேறு இழப்புகளைச் சந்தித்தனர். பொருள் இழப்பு, கால இழப்பு, அண்டை அயலாரின் ஏச்சுப் பேச்சு என்று மிகுந்த அழுத்தங்களுக்கு ஆளாகினர். அது மட்டுமல்லாமல் இவர்களுக்கு அரசு எந்தவித ஆதரவோ, உதவியோ செய்யவில்லை என்பது வருத்தத்துக்கு உரிய செய்தி.
இப்படித் தங்களை இழந்து இயற்கைவழி வோளண்மையை முன்னனெடுத்தவர்கள் பலர். அவர்களில் ஒருவர்தான், வேளாண் மையில் நீண்ட நெடிய அனுபவமும், அதை மற்றவர்களுக்குக் கற்றுத்தரும் திறனும் கொண்டவருமான சத்தியமங்கலம் சுந்தரராமன்.
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இயற்கை வழி வேளாண்மை பரப்புதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர். இடைவிடாது களப்பணியில் இருந்து வருபவர். இருபதுக்கும் மேற்பட்ட நூற்களை எழுதியுள்ளார். பல மொழிபெயர்ப்புகள் செய்துள்ளார். கட்டுரைகள் தினமணி, இந்து தமிழ் நாளிதழ், தமிழினி, தமிழர் கண்ணோட்டம் முதலிய பல இதழ்களில் பல்வேறு கட்டுரைகளை எழுதி வருபவர். சிறந்த மொழிபெயர்ப்பிற்கான விருது, சிறந்த வேளாண் அறிவியலாளர் விருது என்று பல விருதுகளைப் பெற்றவர். தமிழில் அலையாத்திக் காடுகள், மரபீனி முதலிய ஏராளமான கலைச் சொற்களை உருவாக்கியுங்ளளார். தமிழர்களுக்கு என்று தனியான சாதி சமயமற்ற சிந்தனை மரபு உண்டு என்றும் அதன் பெயர் திணையியல் என்றும் விளக்கி, தமிழர்களின் தொன்மையான சிந்தனை மரபான திணையியல் போட்பாட்டை மீட்டெடுத்தவர்.
Be the first to rate this book.