திருக்குர்ஆனில் முஸ்லிம் கணவருக்குரிய கடமைகள் பலவும் தெளிவான சட்ட வடிவில் வரையறுக்கப்பட்டிருக்க, மனைவிக்குரிய கடமைகள் அவ்வளவு குறிப்பாகக் கூறப்படவில்லை. மேலும் அவற்றில் சட்டரீதியிலான நிபந்தனைகளோ கடமைகளோ மிக அரிதாகவே உள்ளன.
என்றாலும் ஒழுக்கம் பற்றிய விளக்கங்களும், புறசமயப் பெண்மணிகளின் நடத்தைகள் பற்றிய வர்ணனைகளும், அறியாமைக் காலகட்டத்தின் பெண்கள் நடந்துகொண்ட விதம், அவர்களின் மனப்போக்கு ஆகியவற்றுக்கு எதிரான எச்சரிக்கைகளும் அதிக அளவில் காணப்படுகின்றன.
இவற்றை அறிமுகமாகக் கொண்டு ஆயிஷா லெமு இந்த நூலில் திருமணம் எதற்காக என்பதில் தொடங்கி பொருத்தமான வாழ்க்கைத் துணையை எவ்வாறு தேர்ந்தெடுப்பது, நம்பிக்கையும் நேர்மையும், பாலுறவு, கலந்தாலோசித்தல், புரிந்துணர்வு என 13 இயல்களில் முன்மாதிரி முஸ்லிம் மனைவி கைக்கொள்ள வேண்டிய பண்புகளை விவரிக்கிறார்.
அத்துடன் வாழ்விலும் குடும்ப அமைப்பிலும் ஆணும் பெண்ணும் உயிரியல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் எப்படி ஒன்றுபோல இருப்பதில்லையோ அதுபோலவே இருபாலரும் நடந்துகொள்ள வேண்டிய 'விதம்' மாறுபடும் சில விஷயங்களும் உள்ளன என வலியுறுத்துகிறார். இதன் மூலம் இந்நூலில் உள்ள அனைத்தும் இஸ்லாமிய போதனைகளை நாணயமாகப் பிரதிபலிக்க விரும்பும் எந்த ஒரு மனைவிக்கும் பயனுள்ள வழிகாட்டியாக அமையும். இதுவே இந்த நூலைப் படிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறது.
Be the first to rate this book.