திருமணம் என்பது ஆணும் பெண்ணும் இணைந்து இல்லறம் நடத்துவதற்கான ஒரு வாழ்க்கை ஒப்பந்தம் மட்டுமன்று. அது ஒரு சமூக, சட்ட, உறவுமுறை அமைப்பும் ஆகும்.
ஆனால் இந்த அமைப்பில் முஸ்லிம் பெண்களின் பங்கை மட்டுமே வரையறைக்கும் முயற்சியில், பேச்சிலும் எழுத்திலும் இவ்வளவு ஏன் முக்கியத்துவம் என வினா எழுப்பும் ஆயிஷா லெமு, இந்நூலில் முன்மாதிரி முஸ்லிம் கணவன் எப்படி இருக்கவேண்டும் என்பதை குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் விவரிக்கிறார். இதை மணம் ஏன் செய்துகொள்ள வேண்டும் என்பதில் தொடங்கி, மணமகளை எவ்வாறு தேர்வு செய்வது, கணவனின் கடமைகள், குழந்தை வளர்ப்பு, பிரச்சினைகளைப் புரிந்து கொள்ளுதல் போன்றவற்றினூடாக விளக்குகிறார்.
மேலும் முன்மாதிரி கணவனிடம் பெண்கள் எதிர்பார்க்கும் 25 பண்புகளைப் பட்டியலிட்டு, அவை மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கைக்கு மிகவும் அவசியம் என்கிறார்.
இதன் மூலம் இந்நூல் முஸ்லிம் சமூகத்தில் முன்மாதிரிக் கணவனுக்குரிய இஸ்லாமியத் தகுதியை அறியச் செய்கிறது. அத்துடன் இஸ்லாமிய வாழ்வில் கிடைக்கும் மகிழ்ச்சியைக் கொண்டாடவும் உதவுகிறது.
Be the first to rate this book.