விதி மையப் பார்வை ‘முன்கூறப்பட்ட சாவின் சரித்திரம்’ நாவலின் மையப்பண்பாக இயங்கியிருக்கிறது. விதியில் நம்பிக்கையற்றவர்கள் இந்தக் கதையில் நிகழும் தொடர் தற்செயல்களின் ஒழுங்கை அவதானிக்கலாம். ஆங்கெலா விகாரியோவின் கன்னித்தன்மை இழப்பிற்கு உண்மையில் சந்தியாகோ நாஸார்தான் காரணமென்று நாவலில் எங்குமே நிறுவப்படாமல் விட்டிருப்பதன் மூலம் வாழ்வின் அபத்த அவலம் சுட்டப்படுகிறது. சந்தியாகோ நாஸாரின் கொலையைத் தவிர்ப்பதற்கான வாய்ப்புகள் எப்படி தற்செயல் சம்பவங்களின் மூலம் நிறைவேறாமல் போகின்றன என்பதை மார்க்கேஸின் பிரமாதமான விவரிப்பு விளக்குகிறது. பத்திரிகையாளனின் ஆகச்சிறந்த ஆற்றலான செய்தியை வழங்கும் உத்தியில் புனைவாக்கப்பட்டிருக்கிறது இந்நாவல்.
-குணா கந்தசாமி
Be the first to rate this book.