யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முதலாவது தமிழ்ப் பேராசிரியர் க.கைலாசபதியின் நினைவு நூலாக ஆங்கிலத்தில் சில ஆண்டுகளுக்கு முன் வெளியான கட்டுரைகள் இப்போது புதிய கட்டுரைகளுடன் தமிழுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. சங்கச் செய்யுள்கள் எனப்படும் தமிழ்நாட்டு முன்வரலாற்றுக் கால வீரயுகச் செய்யுள்களை ஆராய்ந்து கைலாசபதி தந்த விளக்கங்கள் ‘இலக்கிய மூலங்கள்’ என்ற கட்டுரையாகியுள்ளது. ‘அமணர் அளித்த பெருஞ்செல்வங்களான கல்வெட்டு மூலங்கள்’, ‘தமிழ் பிராமி எழுத்து’, ‘பிராமி எழுத்துப் பொறிப்புகளில் உள்ள ஆட்பெயர்களும் தமிழகத்தின் தொடக்க வரலாறும்’, ‘மக்களும் மொழியும்’, ‘சமுதாய உருவாக்கம்: வெளிப்படும் தோற்றங்கள்’, ‘சமூகமும் பொருளாதாரமும்: ஒரு மாற்று நோக்கு’, ‘பிராமணரும் யாகங்களும்’ ஆகிய பொருளில் எண்ணற்ற ஆய்வுத் தகவல்கள் இந்நூலில் உள்ளன. ராதா சம்பகலட்சுமி, ராஜன் குருக்கள், ஜார்ஜ் எல்.ஹார்ட், பிரான்சுவா குரோ, க.கைலாசபதி, நொபொரு கராஷிமா, கிறிஸ்தோபர் மலோனி, எம்.ஜி.எஸ்.நாராயணன், கேசவன் வெளுத்தாட்டு, ஏ.கே.ராமானுஜன், கா.சிவத்தம்பி, சுதர்ஷன் செனவிரத்ன, ஸான்போர்ட் ஸ்டீவர், ஆர்.டிரௌட்மன், கமில் ஸ்வெலபில், பர்ட்டன், ஸ்டைன் ஆகியோரின் வரலாற்றாய்வு நிறைந்த புத்தகம்.
Be the first to rate this book.