உருவங்களுக்கும் உருவின்மைகளுக்குமான இடைவெளியில் நிகழும் இயக்கத்தின் சிறுபொழுதுகளைக் கவிதையில் நிரந்தரப்படுத்த விரும்புகிறார் எஸ். செந்தில் குமார். ‘கைப்பையைப் பாதுகாப்பது போலப் பத்திரப்படுத்திய முத்தங்கள்’, ‘குழந்தைகளை வாசலில் நின்று அழைக்கும் வார்த்தைகள்’ என்னும் உருவற்ற உருவங்களும் ‘ஸ்தனத்தில் வந்தமரும் குருவியை விரட்டிப் பாலருந்தும் சிசு’, ‘தன்மேல் நடப்பவர்களைத் தனது மற்றொரு முனைக்கு நகர்த்தும் பூமி’ என்ற உருவம் சார்ந்த உருவின்மைகளும் புதிய கவியுலகை உருவாக்குகின்றன. அதில் கருணையும் கழிவிரக்கமும் அனுதாபமும் கலந்த ஈரமும் நிரம்பியிருக்கிறது.
இது செந்தில்குமாரின் மூன்றாம் கவிதைத் தொகுப்பு.
Be the first to rate this book.