மனிதனின் எண்ணப் பரிமாற்றத்திற்கு எத்தனையோ ஊடகங்கள் உள்ளன. அதில் வாசிப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது. வாசிப்பிலும் சிறுகதை, கவிதை, கட்டுரை எனப் பல பிரிவுகள் உள்ளன. அவை அனைத்திலும் வசீகரம் கொண்டது நாவல். நாவலை ஒரு வாசகன் படிக்கவேண்டிய அவசியம் என்ன? வெறும் பொழுதைப் போக்கவா? பொழுதைப் போக்க எத்தனையோ வழிகள் இருக்க நாவலை வாசிக்க வேண்டிய அவசியம் ஏன் எழுகிறது?
வாழ்க்கையினூடாக ஒவ்வொரு தனிமனிதனும் அவன் வாழ்விலிருந்து பெறுகின்ற அனுபவங்கள் சொற்பமானவை; எல்லைக்குட்பட்டவை. ஆனால் வாழ்க்கையோ பரந்துபட்டது; பன்முகத் தன்மை உடையது. இவ்வாழ்வின் பிரமாண்டத்தையும் பின்னங்களையும் தன் வாழ்விலிருந்து மட்டுமே மனிதன் அறிந்துணர்வது சாத்தியமில்லாதது. பிறரது வாழ்வின் அனுபவங்களின் மூலமே தன் வாழ்விற்கு செழுமையையும் முழுமையையும் பெற்றுக்கொள்ளும் பலவீனமான நிலையிலேயே மனிதன் இருக்கிறான். அப்படி அறியும் முயற்சியில் அவனுக்கு நாவல் என்ற வடிவமே பெரிதும் துணை புரிகிறது.
Be the first to rate this book.