மார்ட்டின் லிங்ஸ் எழுதியிருக்கும் முஹம்மத் நபிகளாரின் இந்த வாழ்க்கை வரலாறு, பன்னாட்டளவில் பாராட்டப்பட்ட முழுமையான, ஆதாரப்பூர்வமான விவரிப்பாகும். இது 8, 9ஆம் நூற்றாண்டுகளில் அரபு மொழியில் எழுதப்பட்ட சீறா எனப்படும் வாழ்க்கை வரலாறுகளை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. இவை நபிகளாரின் வாழ்க்கையில் நடந்த பல்வேறு நிகழ்வுகளை நினைவுகூர்கின்றன. இந்த நூல் முஹம்மத் நபிகளாரின் உரையாடலை நேரில் கேட்டு, அவருடைய வாழ்க்கைச் சம்பவங்களுக்கு நேரடிச் சாட்சியாக இருந்த ஆண்களும் பெண்களும் கூறிய வார்த்தைகளை வெளிப்படுத்தும் பல முக்கியப் பத்திகளைக் கொண்டிருக்கிறது.
‘முஹம்மத் - மூலாதார நூல்களின் அடிப்படையில் நபிகளாரின் வாழ்வும் பணியும்’ என்னும் இந்த நூல் தனது ஆதாரங்களை நுட்பமாகவும் விரிவாகவும் பயன்படுத்துவதில் பெரிதும் நேர்மை காட்டுகிறது. அதில் விவரித்துச் சொல்லப்படும் பாணி புரிந்துகொள்வதற்கு எளிதாக இருக்கிறது. மேலும் மொழியைப் பயன்படுத்துவதில் உள்ள தூய்மையும் ஊக்கமும் அதில் சொல்லப்படும் நிகழ்வின் எளிமையையும் கம்பீரத்தையும் பிரதிபலிக்கின்றன. இதுவரை பன்னிரண்டு மொழிகளில் வெளிவந்திருக்கிறது. அத்துடன், ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இறைத்தூதரின் வாழ்க்கை வரலாறுகளிலேயே மிகச் சிறந்தது என இஸ்லாமாபாத்தில் நடந்த தேசிய சீறத் மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது... தவிர, பல்வேறு விருதுகளையும் பெற்றிருக்கிறது. இந்த விரிவாக்கப்பட்ட புதிய பதிப்பு, 2005இல் நூலாசிரியரின் இறப்புக்குமுன் சேர்த்த புதிய தகவல்களையும் கொண்டிருக்கிறது. இதில் விரிவடைந்துவரும் இறைத்தூதரின் தாக்கம், சிரியாவிலும் அதன் அண்டை நாடுகளிலும் இஸ்லாத்தின் செய்தி பரவிவருதல் ஆகியவை பற்றிய முக்கியத் தகவல்களும் இடம்பெறுகின்றன.
Be the first to rate this book.