இஸ்லாத்தைப் புரிந்துகொள்ளாமல் இன்றைய நவீன உலகத்தைப் புரிந்துகொள்ள இயலாது. இஸ்லாத்தை புரிந்துகொள்ள வேண்டுமென்றால் முஹம்மத் (ஸல்) அவர்களை ஒரு மனிதர் என்ற அளவிலும் ஓர் இறைத்தூதர் என்ற அளவிலும் புரிந்துகொள்ள வேண்டும்.
ஏனைய மதங்களைப் பற்றியவர்களை (உலக மக்கள்) தெரிந்திருப்பதை விட அதிகமாக முஹம்மத் (ஸல்) அவர்களின் வாழ்க்கையை உலக மக்கள் தெரிந்திருக்கிறார்கள். ஆனால் அவர்களின் வாழ்க்கையை மிகவும் தவறாகப் புரிந்து வைத்திருக்கின்றார்கள். உண்மையைச் சொன்னால் வேண்டுமென்று திரித்துக் கூறி வருகின்றார்கள்.
இந்நிலையில், கரன் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் (இவர் கடவுள்களின் வரலாறு - ’’A History Of God’’ என்ற உலகில் அதிகமாக விற்பனையாகும் நூலின் ஆசிரியர்) ஒரு சுருக்கமான, நடுவு நிலையான, குன்றின் மேலிட்ட விளக்கமாய் விளங்கும் நூல் ஒன்றை (உலகமெல்லாம் கண்ணியத்தோடு பார்க்கப்படும் இந்த மாமனிதரைப் பற்றிய வரைவு ஒன்றை) தந்திருக்கிறார்.
ஏனைய இறைத் தூதர்களோடும், ஆன்மீகவாதிகளோடும் ஒப்பிட்டு, முஹம்மத் (ஸல்) அவர்களின் ஆன்மீக கருத்துக்கள், அவருடைய வாழ்க்கையின் யதார்த்தங்கள்
இவற்றிலிருந்துதான் முஸ்லிம்கள் தங்கள் வாழ்க்கைக்குத் தேவையான வழிகாட்டுதல்களைப் பல நூற்றாண்டுகளாகப் பெற்று வருகின்றார்கள் என்பதை மிக அழகாக ஆய்வு செய்திருக்கிறார். இதன் மூலம் இஸ்லாத்தின் அடிப்படைகளை, அனைத்து மத நம்பிக்கையைச் சார்ந்தவர்களும் அறிந்திட செய்கின்றார்.
Be the first to rate this book.