முஹம்மது இப்னு அப்துல்லாஹ் (ஸல்) அவர்கள், தம் கண்களால் அறிந்து பார்த்திராத ஒரு தந்தைக்கு, கி.பி. 570இல் பிறந்தார்கள். தன்னுடைய இறுதிச் செய்தியை மனிதகுலத்திற்கு அளிக்கும் பணிக்காக அல்லாஹ்வினால் தேர்ந்தெடுக்கப்பட்ட மனிதர் ஆவார்கள். மனித சமுதாயத்திற்காக, இந்தச் செய்தியை இறுதி வரைக்கும் பாதுகாக்கும் பணியை அல்லாஹ் மேற்கொண்டான். முஹம்மது (ஸல்) அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட பணி மிகவும் பெரியதாகும். அவர்களின் தூதுச் செய்தியானது வெறுமனே வழங்குவதும், அதற்கான ஒப்பந்தம் செய்துகொள்வதும் மட்டுமல்ல. அவர்கள் தங்களின் சமகால மக்களுக்கும், எதிர்கால சந்ததியினருக்கும், முழு வழிகாட்டு-தல் வழங்குபவர்களாக இருந்தார்கள். மனித குலம் எவ்வாறு வாழவேண்டும் என அல்லாஹ் விரும்புகிறானோ, அதனை முடிவு செய்து பின்பற்ற ஒவ்வொரு சமுதாயத்திற்கும் பிரகாசிக்கக் கூடிய ஒளியாக அவர்களின் வழிகாட்டுதல் இருந்தது. மனித உயிரினம் தொடரும் வரையில், ஒவ்வொரு தனிமனிதருக்கும், ஒவ்வொரு சமுதாயத்திற்கும் இந்த வழிகாட்டுதல் தொடர்ந்து பொருந்தும்.
நபி (ஸல்) அவர்களின் வாழ்வில் நிறைந்திருக்கும் நற்பண்புகளும் நன்னடத்தைகளும் புதிய கோணத்தில் வெளிக்கொணர வேண்டுமென்ற குறிக்கோளுடன் டாக்டர் ஆதில் ஸலாஹி அவர்கள் எழுதிய Muhammad His Character and Conduct" என்ற நூலின் தமிழாக்கம்தான் "முஹம்மத் (ஸல்) அவர்களின் நற்பண்புகள் - நன்னடத்தைகள்" என்ற இந்நூலின் முதல் பாகம்.
Be the first to rate this book.