மனித வரலாற்றின் போக்கையே புரட்டிப்போட்ட மனிதர்கள் என்றொரு பட்டியலை எவர் தயாரித்தாலும், முஹம்மது நபி அதில் முதன்மையான இடங்களில் ஒன்றைப் பெறுவது நிச்சயம்.
முஹம்மத் நபி (ஸல்) அவர்களைப்பற்றி எழுதப்பட்ட வாழ்க்கை வரலாற்று நூல்களில், உலக அளவில் அதிகக் கவனித்துக்குரியதும் விற்பனையாவதும் ஹுஸைன் ஹைகல் எழுதிய இந்த ‘ஹயாத் முஹம்மத்’ நூல்தான். ஆங்கிலம், பிரெஞ்ச் உள்ளிட்ட உலகின் பல்வேறு மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்ட இந்நூல், ‘காலச்சுவடு’ வெளியீடாகத் தமிழில் தற்போது வெளியாகியிருக்கிறது.
உலக கிளாசிக்குகளில் ஒன்றாக மதிக்கப்படும் இதனை வெகுசிறப்பாகத் தமிழில் மொழிபெயர்த்திருக்கும் குளச்சல் மு. யூசுப் பாராட்டுக்குரியவர்.
உலக நாகரிகங்களின் தோற்றம், வளர்ச்சி பற்றி ஆர்வம் கொண்ட எவரும் தவறவிட்டுவிடக் கூடாத அதிமுக்கியமான ஓர் ஆக்கம்.
Be the first to rate this book.