1653 இல் வெனிஸ் நகரத்திலிருந்து இந்தியாவுக்கு ஓடிவந்த நிக்கொலா மனுச்சிக்கு அப்போது வயது பதினான்கு. மனுச்சி ஔரங்கசீப்பின் சகோதரர் தாராவின் போர்ப்படை வீரனாகவும் மொகலாய அரசவை மருத்துவராகவும் பணியாற்றியவர். மன்னர் ஷா ஆலமின் சினத்திற்கு ஆளாகி இவர் சிறைபிடிக்கப்பட்டபோது அங்கிருந்து தப்பி கோல்கொண்டா மன்னரின் அரசவையில் மருத்துவரானார். இறுதியில் சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் அடைக்கலம் புகுந்தார். மொகலாய ஆட்சியின்போது தான் பெற்ற அனுபவங்களை மனுச்சி Storia do mogor என்ற நூலாக எழுதினார். சுமார் 2000 பக்கங்கள் கொண்ட இந்த நூலை சென்னையிலிருந்தபோது எழுதியுள்ளார். இதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் வில்லியம் இர்வின்.
Be the first to rate this book.