ஒரு தேசத்தை எப்படி புரிந்துகொள்வது ? எழுதப்பட்ட வரலாற்றின் வழியாக அல்லது இலக்கியங்களின் மூலமாக அல்லது பயணத்தின் ஊடாக அல்லது பண்பாட்டின் கூறுகளாக. இவற்றில் ஜெயமோகன் பிந்தைய இரண்டையும் தேர்வு செய்திருக்கிறார். அதன் வழியாக முந்தைய இரண்டையும் ஆராய்ந்திருக்கிறார். இந்தியாவை அறிந்துகொண்டு அறியவைக்க முயற்சித்திருக்கிறார். எல்லா நிலங்களும் உயிருள்ளவைதான். தட்பவெப்பம் சார்ந்து அவற்றின் குணநலங்கள் உருவாகின்றன. சுருக்கமாகச் சொல்வதென்றால் நிலங்களே அங்கு வாழ்வும் மனிதர்களின் உருவத்தைச் செதுக்குகின்றன. அந்த வகையில் இந்தியாவின் முகம் எது என்ற தேடலுக்கான விடையே இந்த 'முகங்களின் தேசம்' நூல். மாநிலங்களாகப் பிரிந்திருக்கும் நிலப்பிரதேசங்கள் எந்தக் கண்ணியில் ஒன்றிணைகின்றன என்பதைத் தன் பார்வையின் வழியே அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார் ஜெயமோகன்.
Be the first to rate this book.