நிகழ்த்தப்பட்ட வரலாறு, திரிக்கப்பட்ட வரலாறு இரண்டையும் பிரித்தறிய மெய்ப்பித்தல் தேவைப்படுகிறது. மெய்ப்பித்தல், அறிவியல் வழியது. வாய்வழி மெய்ப்பித்தல் என்கிற ஒன்று, நம்மில் உண்டு. கதைகளினூடே, புனைவின் வழியில் மெய்ப்பித்தல். புனைவு வழியே வரலாற்றை நிரூபிக்க முனையும் ஆசிரியருக்கும், அறிவியல் வழி கோரும் மாணவருக்கும் இடையிலான போராட்டமே, இக்கதை. அறிவியலின் திரிபை அறிவியல் அதுவாகவே திருத்திக் கொள்கிறது. வரலாற்றின் திரிபைத் திருத்த ஒரு குரல் தேவைப்படுகிறது. குறியீட்டு கதாபாத்திரங்கள் கொண்ட இக்கதையில், சுரேந்திரனின் குரல் அப்படியான ஒன்று!
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை பகுதியைச் சார்ந்தவர். மழைக்குப் பிறகான பொழுது, திற, ஒரு நாடோடிக் கலைஞன் மீதான விசாரணை, பிராண நிறக் கனவு, எண்வலிச் சாலை, எத்திசைச் செலினும், தடுக்கை ஏழு சிறுகதைத் தொகுப்புகள்; முத்தன் பள்ளம், கொங்கை, அப்பல்லோ மூன்று நாவல்கள்; முட்டாள்களின் கீழ் உலகம், அழிபசி தீர்த்தல், சொல்லேர் மூன்று கட்டுரைத் தொகுப்புகள் வெளியிட்டுள்ளார். இவர் என்சிபிஎச் & தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் விருது, நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் விருது, தமிழ்நாடு அரசு விருது உட்பட பல விருதுகள் பெற்றுள்ளார்.
Be the first to rate this book.