எலும்புகள்தான் ஆரோக்கியமான உடலுக்கு அஸ்திவாரம். நிற்க, நடக்க, ஓட, அமர என துடிப்பான எந்தச் செயலைச் செய்யவும் எலும்புகள் உறுதியாக இருக்க வேண்டும். அப்படியில்லாமல் கழுத்து, இடுப்பு, முழங்கால், குதிகால், தோள்பட்டை, முழங்கை என அனைத்து மூட்டு பகுதிகளில் ஏற்படும் வலிக்கான காரணம் என்ன? அந்த வலி ஏற்படாமல் இருக்க என்னென்ன முறைகளைப் பின்பற்ற வேண்டும், வலி தடுக்கும் வழிகள் என்னென்ன? இவ்வாறு எலும்புகளில் ஏற்படும் உபாதைகளுக்கு வலி நிவாரண மாத்திரைகள், வீக்கத்தைக் குறைக்கும் மருந்துகள், ஆபத்து இல்லாத தூக்க மாத்திரைகள் போன்றவற்றை தேவை உள்ளபோது பயன்படுத்தலாம் என்று மூட்டுவலிகளுக்கு ஆலோசனைகள் கொடுப்பதோடு... சத்துக்குறைபாட்டினால், மாறுபாடான ஹார்மோன்களால், தேவையற்ற அசைவுகளால், வயது காரணமாக ஏற்படும் மூட்டுவலிகளுக்கான சிகிச்சைகளும் உண்டு என்று படத்துடனும் உடணவு முறைகளுடனும் விரிவாக விளக்குகிறது இந்த நூல்.
மூட்டு சிகிச்சை மட்டுமின்றி எலும்பு ஆரோக்கியமாக, வலிமையாக இருக்கவும், முறிந்த எலும்பு விரைவில் ஒன்றுசேரவும் தீர்வு உண்டு என்பதை மருத்துவர் துரை.நீலகண்டன் இந்த நூலில் தெளிவாக விளக்கியிருக்கிறார். மூட்டுவலி ஏற்பட்டால் காலத்தோடு சரியான சத்தான உணவுமுறைகளை மேற்கொண்டு உடற்பயிற்கள் செய்துவர வலியில்லாத வாழ்க்கை வாழலாம். நீண்ட காலமாக மூட்டுவலியால் அவதியுறுவோர் இந்த நூல் தரும் மருத்துவ நுணுக்கங்களால் இனி வலியின்றி வாழலாம்!
Be the first to rate this book.