ஈழத்தின் முக்கியமான இலக்கிய ஆளுமைகளில் ஒருவரான மு. தளையசிங்கம், 1950களின் பிற்பகுதியில் தொடங்கி 1970கள் வரையிலும் எழுதியவை அனைத்தும் ‘ஒரு தனி வீடு’, ‘புதுயுகம் பிறக்கிறது’, ‘போர்ப்பறை’, ‘மெய்யுள்’, ‘கலைஞனின் தாகம்’, ‘ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி’, ‘முற்போக்கு இலக்கியம்’ ஆகிய நூல்களில் இடம்பெற்றவையும் இதழ்களில் வெளிவந்து நூலுருவம் பெறாதவையும் இந்நூலில் தொகுத்துத் தரப்பட்டுள்ளன.
சுமார் இருபது சிறுகதைகள், ஒரு நாவல், இரண்டு குறுநாவல்கள், ஏழு கவிதைகள் மற்றும் இருபதுக்கும் மேற்பட்ட மெய்யுள், இலக்கிய விமர்சனக் கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.
இவற்றைக் காலவரிசைப்படி தொகுத்துப் பதிப்பித்துள்ளவர், மு. தளையசிங்கத்தின் சகோதரரும் கவிஞர் விமர்சகருமான மு. பொன்னம்பலம்.
Be the first to rate this book.