மு.க. - இந்த இரண்டெழுத்துக்காரரைப் பற்றி எதைச் சொன்னாலும், இரண்டு ஆபத்து உண்டு.
ஒன்று - புத்தகம் முழுக்க ஜால்ரா அடிக்கிறாங்கப்பா!
இரண்டு - அம்மாகிட்ட பணம் வாங்கியிருப்பாங்க... போட்டுத்தாக்கறாங்க!
ஆனால் மூன்றாவதாக ஒரு முடிவெடுத்து விருப்பு வெறுப்பின்றி ஆழ்ந்து எழுதப்பட்டிருக்கிறது இந்நூல் எழுதியிருக்கும் இளைஞர் ஜெ. ராம்கி தமிழ்ப் பத்திரிகை வாசகர்களுக்கும் இணைய வாசகர்களுக்கும் நன்கு பரிச்சயமானவர். `ரஜினி : சப்தமா? சகாப்தமா?’ என்ற இவரது முந்தைய அணுகுண்டு இன்னும் தமிழ் வாசகர்களிடையே பரபரப்பாக விவாதிக்கப்பட்டுக் கொண்டு இருக்கிறது.
கருணாநிதியின் அரசியல் கொஞ்சம் வித்தியாசமானது. அதில் நிறைய சாணக்கியத்தனங்களும் சறுக்கல்களும் இருந்தாலும் அது எப்போதுமே தற்காப்பு அரசியல்தான். கருணாநிதியைப் பற்றித் தெரிந்து கொள்வதும் தமிழக அரசியல் வரலாற்றின் கடைசி ஐம்பது வருஷங்களைப் பற்றித் தெரிந்து கொள்வதும் கிட்டத்தட்ட ஒன்றுதான். வெற்றிகமான சினிமாக் கதை வசனகர்த்தாவாக வாழ்க்கையை ஆரம்பித்த கருணாநிதி, தமிழ்நாட்டின் அரசியலில் சின்ன வயதிலேயே உச்சிக்குப் போனவர். மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவர், ஒரு மாநிலத்தின் முதல்வராவது பெரிய விஷயம்.
Be the first to rate this book.