1920 மற்றும் 1980 களில் வேலூர் நிலப்பரப்பில் உருவான இருவேறு காதல்களை ஒரு புள்ளியில் இணைப்பது தான் இந்த நாவலின் மையநாதம்.
இந்தக் காதல்களுக்கிடையே வேலூரின் மணம் நாவல் முழுவதும் வீசிக் கொண்டே இருக்கிறது. பாலாறின் வளமும் கொண்டாட்டமும் பின் சீரழிவும், வேலூர் கோட்டையின் பிரசித்தி பெற்ற சிப்பாய் புரட்சி, சிஎம்சி மருத்துவமனை உருவான கதை என நாவலூடே அவையும் தொடர்ந்து பயணிக்கின்றன.
இளையராஜா இல்லாத 80-களை நம்மால் நினைத்துக் கூட பார்க்க முடியாது. நாவல் முழுவதும் அவருடைய பின்னணி தான். அதற்கு ஏற்றார் போல நாயகனும் அவனின் இரு நண்பர்களும் இசைக்கலைஞர்கள். ராஜாவிற்காகவே இக் கதாபாத்திரங்கள் இவ்வாறு வடிவமைக்கப் பட்டிருக்கலாம்.
மொத்தத்தில் இந்நாவல் 400 பக்கங்களில் ஓர் நிறைவான பின்னோக்கிய பயணம்..!
Be the first to rate this book.