தமிழ் மொழி தொடர்பான நம் சமுதாயத்தின் செயல்பாடுகள் பல தசாப்தங்களாகவே தீவிரப்படுபவை. ஆனால், மொழியைப் புரிந்துகொள்ளும் நம் முயற்சியில் இந்தத் தீவிரத்தைக் காண இயலாது. ஒன்றை ஒன்று வலுப்படுத்தியவாறே இணையாகப் பயணிக்க வேண்டிய இந்த இரண்டும், ஒன்று மற்றொன்றைக் கண்டுகொள்ளாமலேயே நகரும் புதிர் இது.
ஆர்வலர்களின் மொழி பற்றிய சராசரி சிந்தனைக்கும், நம் கல்விக்கூடங்களின் மொழி பற்றிய சிந்தனைக்கும் தன்மையில் வேறுபாடு எதுவும் தெரியவில்லை. இது மற்றொரு புதிர். மொழியியல், மொழித் தத்துவத்தின் முடிபுகளை எதிர்கொள்ளும் முதிர்ச்சியை நம் சமுதாயம் இன்னும் அடையாதது வியப்பு. நம் மொழிப் பற்று, மொழி இயலுடனும் மொழிபற்றிய தத்துவத்துடனும் இணைந்து நுட்பமடைய வேண்டும்.
Be the first to rate this book.