பெரும்பான்மையான வாசிப்புகள் மௌனியின் சிறுகதைகளில் கதையாடல்களின் கவித்துவத்தையும் வடிவ நேர்த்தியையும் விரித்துரைப்பனவாக அமைந்திருக்கின்றன. ஆனால் மும்மை (Ternary) மற்றும் சைவ சித்தாந்த மும்மையையும் கொண்டு மௌனி கதைகளைப் பகுத்தாய்கிறார். மௌனி கதைகளின் மீது இதுவரையிலான பார்வைகளின் கோணத்திலிருந்து ஜமாலனின் நோக்கு சற்று வித்தியாசமான வாசிப்பையும் விவாதத்தையும் கோருகிறது.
- எஸ். சண்முகம்
நூலாசிரியர் - ஜமாலன் பற்றி...
மொழியும் நிலமும், நவீன தொன்மங்களும் நாடோடிக் குறிப்புகளும், கிம் கி டுக்கின் சினிமாட்டிக் உடல்கள் போன்றவை இவரது பிற நூல்கள். கணினித் துறையில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். தமிழ் விமர்சன வெளியிலும் இடதுசாரி பண்பாட்டு அரசியலிலும் ஈடுபாடு கொண்டு தொடர்ச்சியாக செயல்பட்டு வருபவர்.
Be the first to rate this book.