நாம் இதை நாவல் அல்லது நிவோலா அல்லது அற்பப் புனைவு அல்லது மத்திய தர வர்க்கத்தின் ஊசலாட்டம் என்று எப்படி அழைத்தாலும், தத்துவார்த்தப் பிரச்னையாக உள்ள ஒன்றைத் நவீன பொலிவியாவின் அரசியல் /சமூகப் பின்னணியில் வைத்துப் பார்க்க முயற்சிக்கிறது. அதனால் தான் ஸ்பானிஷ் மொழியில் இந்தப் படைப்பு வெளிவந்தவுடன், பொலிவியா அரசாங்கம் எல்லா பிரதிகளையும் தீக்கிரையாக்கியது.
'இரண்டு சிறையறைகள், மூன்று குழந்தைகள் ' - இது யதார்த்தமாகவும், படிமமாகவும் இந்த படைப்பு முழுக்க இழையோடுகிறது. இந்த படைப்பில் வரும் கதைச்சொல்லியைப் போலவே நாமும் சிறையறைகள் மற்றும் குழந்தைகளுக்குடையே மௌனமாய் இருக்கிறோம். காலவாதியாகிப்போன அல்லது காலவதியாகாத கோட்பாடுகளை கொண்டு, நாம் இந்த மௌனத்தை கலைக்க முயற்சிக்கிறோம். இப்படைப்பு இந்த மௌனத்தை உரக்க சொல்கிறது. மௌனத்தை எதிரொலிக்கச் செய்கிறது. இந்த எதிரொலியை நாம் ஒவ்வொரு பக்கங்களிலும் கேட்க முடியும்.
Be the first to rate this book.