நான் இந்த குறிப்புகளை முதன்முறை படித்தபோது, அவை புத்தக வடிவில் இல்லை. இதை எழுதிய மனிதரை எனக்கு தெரியாது. படிக்கப் படிக்க, இந்த மனிதரைப் பற்றி தெளிவாகத் தெரிந்தது. நான் அவருடைய மகள் என்று சொல்லிக்கொள்வதில் பெருமைப்படுகிறேன். இந்தப் புத்தகத்தை நீங்கள் படித்து முடித்ததும், அதே பாதையில் நீங்களும் பயணிக்க ஆசைப்படுவீர்கள் என்பதில் எனக்கு சந்தேகமேயில்லை. அது, அவர் விவரித்த அழகுக்காகவும் இருக்கலாம் அல்லது அவர் பகிர்ந்துகொண்ட அவருடைய ஆழமான உணர்வுகளாலும் இருக்கலாம்.
பல இடங்களில் நானே, ஆல்பெர்டோ கிளைடோலின் இடத்தில் இருந்து, என் தந்தையின் முதுகைப் பிடித்துக்கொண்டு, அவருடன் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்வதுபோல் உணர்ந்தேன். ஒருவேளை உங்களுக்கு அவர் சென்று பாதையிலேயே பயணம் செய்ய வாய்ப்புக் கிடைத்தால், அங்கே பல விஷயங்கள் இன்னும் மாறாமலும் அல்லது இன்னும் மோசமாக ஆனதையும் பார்ப்பீர்க்கள் என்பது வருத்தத்தக்க விஷயம். பின்னாளில் சே என்றழைக்கப்பட்ட அந்த இளைஞனைப்போல, இந்த நிதர்சன உண்மை நம் அனைவருக்கும் ஒரு சவால். நம்முடைய மக்கள் எப்படியெல்லாம் துன்பப்படுகிறார்கள் என்று புரிந்துகொண்டு, அவர்களுக்கென்று ஓர் புதிய உலகைப் படைப்பது நம்முடைய கடமையாகும். நான் மிகவும். நேசிக்கும் அந்த மனிதருடன் உங்களை விட்டுவிடுகிறேன். படித்து மகிழுங்கள் ! எப்போதும் முன்னேறுவோம் !!
- அலெய்டா குவாரா
மார்ச் ஜுலை 2003
5
Solomon Raj 16-06-2021 11:48 pm