வளந்துவிட்ட நம் இந்திய தொழில்நுட்பத்தில் மோட்டார் வாகனங்களின் உற்பத்தியும், அதன் பயன்பாடுகளும் வியக்கத்தக்க வகையில் முன்னேறி இருக்கின்றன. இன்று நகரங்களில் மட்டுமல்லாமல், கிராமங்களிலும்கூட வாகனங்கள் அபரிமிதமாகப் பெருகி, சாலைப் போக்குவரத்து நெரிசலும் பதற்றமும் நிறைந்த பகுதியாக மாறிவிட்டது. இதனால் வாகன விபத்துகளும், உயிர் இழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. வாகனங்களை ஓட்டும்போது விபத்துகளும் உயிரிழப்புகளும் ஏற்படாமல் இருக்க என்ன முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும், விபத்து ஏற்பட்டால் எப்படி நஷ்டஈடு பெற வேண்டும் என்கிற விழிப்பு உணர்வை ஏற்படுத்தும் விதமாக ‘மோட்டார் விகடன்’ இதழில் வெளிவந்த தொடர் கட்டுரைகளின் தொகுப்புதான் இந்த நூல்.
Be the first to rate this book.