உலக வரலாற்றின் ‘மிகப்பெரிய திருட்டு’ என்று வரலாற்றாய்வாளர்களால் வருணிக்கப்படுவது ஃபலஸ்தீன ஆக்கிரமிப்பாகும். நாடோடிகளாய் திரிந்த நாடற்ற யூதர்களுக்காக நாடாண்ட ஃபலஸ்தீனர்கள் நாதியற்ற அகதிகளாய் மாற்றப்பட்ட வரலாறு காலச்சக்கரத்தில் ஏதேச்சையாக நடைபெற்ற நிகழ்வல்ல. இதன் பின்னணியில் நன்கு திட்டமிடப்பட்ட சதிச் செயல்களின் கூட்டணி இருந்ததை வரலாறு பதிவு செய்ய மறக்கவில்லை.
பொதுவாக ஒரு நாட்டின் பாதுகாப்பிற்காக உளவு அமைப்புகளை அந்நாடுகள் உருவாக்குவது உலக நியதி. ஆனால் ஒரு உளவு அமைப்பின் மூலம் ஒரு நாடு உருவாக்கப்பட்டது என்பது உலகில் இஸ்ரேலை தவிர வேறெங்கும் நிகழவில்லை.
இறை நியதிக்கும் உலக நியதிக்கும் கட்டுப்படாத இஸ்ரேல் தனது ஆக்டோபஸ் கரங்களால் “இஸ்ரேலின் நன்மை” என்ற ஒற்றை குறிக்கோளை மட்டுமே மையப்படுத்தி, மொஸாத் நிகழ்த்தியிருக்கும் படுபாதக செயல்களை பட்டியலிட்டுள்ளது இந்நூல்.
Be the first to rate this book.