'பில்லி சூனியம் செய்வினையா? அப்படி ஒன்றுமே இல்லை; எல்லாம் கண்கட்டி வித்தைதான்' எனக் கண்ணைக் கட்டிக்கொண்டு வாய் வித்தை காட்டுபவர்கள் எப்போதும் ஒரு கேள்வியிலிருந்தே தர்க்கத்தைத் தொடங்குகிறார்கள். 'எங்கோ இருக்கும் ஒருவரை எந்தப் புறச்சாதனமும் இன்றி தாக்க முடியுமா?' - சூனியத்தின் எதார்த்த நிலையை மறுக்க இதுதான் தர்க்கம் எனில், புறச்சாதனம் என்பதை முதலில் வரையறை செய்வோம். கல்லால் அடிக்கும்போது கல் ஒரு சாதனம். சொல்லால் அடிக்கும்போது சொல் ஒரு சாதனம். கல்லும் சொல்லும் ஒரே மாதிரியான புறச்சாதனங்களா? இல்லை என்பது பதிலானால், கண்களுக்குப் புலப்படுவது மட்டுமே புறச்சாதனம் என எப்படி வாதிக்க முடியும்? சூனிய விவகாரத்தில் ஜின் இன ஷைத்தான்தான் புறச்சாதனம். 'ஜின்னைத்தான் வசப்படுத்த முடியாதே? ஒரு கல்லைக் கையாள்வதுபோல ஜின்னை ஏவ முடியுமா என்ன?' - வசப்படுத்த முடியாதுதான்; ஆனால், ஏவுகிறவன் வசப்படலாமே? ஜின்னிடம் உதவி கோரி பிரார்த்தனைச் சடங்குகள் செய்கின்ற சூனியக்காரனின் நிலை என்ன? ஷைத்தானிடம் அவன் வசப்பட்டவன்தானே? இருவரின் நோக்கங்களையும் நிறைவேற்றிக்கொள்கிறார்கள். இது புரிந்துணர்வு பந்தம். எறியப்பட்ட கல்லும் எய்யப்பட்ட அம்பும் அல்லாஹ் நாடினால் எதிரியைத் தாக்குவது போல சூனியமும் அல்லாஹ் நாடினால் தாக்கும்; அதே சமயம், அல்லாஹ்வின் வேத நிவாரணம் அதன் பாதிப்பை நீக்கும். 'முடிச்சுகளில் ஊதும் சூனியக்காரப் பெண்களின் தீங்கை விட்டும் நான் பாதுகாவல் தேடுகிறேன்' (113:4) என்று பிரார்த்திக்கிற எந்த முஸ்லிமாயினும் சூனியக்காரியின் முடிச்சுகளால் பாதிப்பு உண்டு என ஒப்புக்கொள்கிறார். ஷெய்க் வஹீது அப்துஸ்ஸலாம் பாலீ இந்நூலில் ஜின் ஷைத்தான்களின் தீண்டல், சூனியத்தின் வகைகள், அவற்றின் பாதிப்புகள், அறிகுறிகள், நபிவழி நிவாரணங்கள், சிகிச்சை அனுபவங்கள் எனப் பல கல்விகளைப் பகிர்கிறார்.
Be the first to rate this book.