இந்நூலில் இடம்பெற்றுள்ள, மனித இயல்பின் அழகையும் அவலத்தையும் திரை விலக்கிக் காட்டுகின்ற ஒவ்வொரு கதையும் சிறப்பாக வாழப்பட்ட ஒரு வாழ்க்கையைப் பிரதிபலிக்கிறது.
பல சமயங்களில், துணிச்சலாக மேற்கொள்ளப்படுகின்ற சாதாரண நடவடிக்கைகள்தான் மற்றவர்களுடைய வாழ்வின்மீது அளப்பரிய தாக்கம் ஏற்படுத்துகின்றன. இன்ஃபோசிஸ் அறக்கட்டளையின் பணிகள் வாயிலாகவும், தன்னுடைய சொந்த இளமைப்பருவம், குடும்ப வாழ்க்கை மற்றும் பயணங்கள் வாயிலாகவும், சுதா மூர்த்தி, இத்தகைய பல கதைகளைத் தன் வாழ்வில் எதிர்கொண்டுள்ளார். அவர் அக்கதைகளைத் தெளிவாகவும் நம் இதயங்களைத் தொடும் விதத்திலும் விவரித்துள்ளார். தன்னுடைய பணிகள் எப்படி தேவதாசி சமூகத்தின்மீது தாக்கம் ஏற்படுத்தியது என்பதையும், ஒரு பொறியியல் கல்லூரியில் தனியொரு மாணவியாகத் தான் எதிர்கொண்ட சவால்களையும், தன்னுடைய தந்தையின் அன்பால் விளைந்த உத்வேகமூட்டும் பின்விளைவுகளையும் பற்றி அவர் இந்நூலில் பேசுகிறார். உலக அளவில் இந்தியத் திரைப்படத்தின் வீச்சைக் கண்டுகொண்டதிலிருந்து கிடைத்த மகிழ்ச்சி, இந்தியக் காய்கறிகளின் மூலாதாரங்கள் ஆகியவற்றில் தொடங்கி, தோற்றத்தைக் கொண்டு மற்றவர்களை எடைபோடும் மேலோட்டமான பார்வைவரை, இக்கதைகள் அன்றாடப் போராட்டங்களையும் வெற்றிகளையும் வெளிப்படுத்துகின்றன.
சுதா மூர்த்தி கர்நாடக மாநிலத்தின் வடபகுதியிலுள்ள ஷிகாவுன் என்ற ஊரில் 1950ம் ஆண்டு பிறந்தார். அவர் கணினி அறிவியலில் எம்.டெக் படித்துள்ளார். அவர் தற்போது இன்ஃபோசிஸ் அறக்கட்டளையின் தலைவராக உள்ளார். கன்னடம் மற்றும் ஆங்கில மொழிகளில் அவர் எழுதியுள்ள புதினங்கள், சிறுகதைகள், சிறுவர் கதைகள், பயணக் கட்டுரைகள், மற்றும் இதரக் கட்டுரைகள் நூல்களாக வெளிவந்துள்ளன. அவருடைய புத்தகங்கள் பல இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அவருக்கு வழங்கப்பட்டுள்ள விருதுகளில், இலக்கியத்திற்காக வழங்கப்படும் ஆர்.கே. நாராயண் விருது (2006), பத்மஸ்ரீ விருது (2006), கர்நாடக அரசால் இலக்கியத்திற்காக வழங்கப்படுகின்ற அட்டிமாபே விருது (2011) ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
Be the first to rate this book.