அய்யனார் ஈடாடி கிராமத்தையும் அங்கே வாழும் பலதரப்பட்ட மக்களையும் அம்மக்களின் மண் சார்ந்த கலாச்சார நிகழ்வுகளையும் விரிவாகவே பதிவு செய்கிறார். அவரால் பதிவு செய்ய முடிகிறது.
இந்த மூதூர்க்காதை என்கிற தொகுப்பில் மொத்தம் பதினான்கு கதைகள் இருக்கின்றன. ஒவ்வொரு கதையும் வெவ்வேறு சம்பவங்களைச் சித்தரிக்கின்றன. கிராமிய வாழ்வியலின் யதார்த்தம் கதையாகியிருக்கிறது. வழக்கொழிந்து போன பல சொற்கள் இங்கே தொழிற்படும் போது கதைகள் புத்துருவாக்கம் பெற்று வாசகனைச் சிந்திக்க வைக்கின்றன.
-எழுத்தாளர் சோ.தர்மன்
Be the first to rate this book.