பல கோடி ஆண்டுகள் வரலாறுகொண்ட பூமியில் எத்தனையோ விதமான உயிரினங்கள் தோன்றின. அவற்றில் பல அழிவுற்றன, பல உயிர்தரித்தன. இயற்கையோடு இயைந்தும் போராடியும் தம்மையும் தம் இனத்தையும் தக்கவைத்துக் கொண்ட பல உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியில் ஒரு படிதான் நாம். நாம் கடந்து வந்த கட்டங்களை, நம் மூதாதையரை அறியத் தரும் முயற்சியே இந்நூல்.
‘மூதாதையரைத் தேடி . . .’ புத்தகம் கிடைத்து படித்து முடித்துவிட்டேன். ஒரு புதிய உலகம் திறந்ததுபோல் இருந்தது. இது என் வாழ்க்கை பற்றிய கண்ணோட்டத்தையே பாதிக்கக்கூடியது. மனித வாழ்க்கையின் கடந்தகால தொலைதூரங்கள் பற்றிய உணர்வு மனதில் படர்ந்தபோது குடும்ப வாழ்க்கையில் நம் இன்றையப் பிரச்சினைகளுக்கு நாம் அதிக முக்கியத்துவம் தந்து பார்ப்பது வெட்கத்தைத் தந்தது. கடந்தகால நெடும் பயணங்களை நினைக்கும்போது நாம் ஒரு குமிழி.
- சுந்தர ராமசாமி
Be the first to rate this book.