அன்றாட வாழ்வின் புழங்கும் பொருட்களில் உறைந்திருக்கும் அதி அற்புதம், மாயம் போன்ற தன்மைகளிலிருந்து தன்னைக் காட்சிப்படுத்திக்கொள்ள முனைகின்றன நெகிழனின் கவிதைகள்.
ஏரியைச் சுற்றி மரங்கள் நின்றிருக்கும் காட்சி, நெகிழனின் கவித்துவத் தரிசனத்தால் மரங்கள் நீரின்மேல் தீராக்காதல் கொண்டவையாகவும், நீரின் அலைகளோ கரை தொட்டு மரம் காண முயல்வனவாகவும் உருமாறுகின்றன. அதே சமயம் வறண்ட ஏரியின் மேல் பறக்கும் கொக்கின் துளிக் கண்ணீரைப் பருக ஏரியின் தவளை நாக்கு காத்திருக்கிறது.
- எஸ். செந்தில்குமார்
Be the first to rate this book.