வாழ்க்கையையும் இலக்கியத்தையும் ஒருசேர கவனிக்கிற காரணத்தாலே சுப்ரபாரதி மணியனின் எழுத்துக்கள் காலத்தின் கட்டாயமாக வெளிப்படிருப்பதில் அவருக்கு இணை யாருமில்லை. அவ்வளவு விரிவான வகையில் அவதானிப்பும் வாழ்க்கையின் மீதும் பிரச்சனைகள் மீதும் கொண்டுள்ளார். அவற்றை சமூகம் மீதான எதிர்வினையாகவும் விமர்சனமாகவும் படைப்பை உருவாக்கியிருக்கிறார். பிரச்சனைகள் பற்றி பேசுவதற்காக எழுதப்பட்டவை அல்ல அவை. வாழ்க்கையை விவரிக்கும் போது கதை மாந்தர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் வெளிப்படுகின்றன. அவை இன்றைய காலத்தின் தொழில் நகரம் சார்ந்த விஸ்வரூபங்களாக பரிமாணம் பெற்று விடுகின்றன. நகரம் சார்ந்த விளிம்பு நிலை பாட்டாளி வர்க்கத்தினர் பற்றி இவ்வளவு விரிவாகவும் அதிகபட்சமான சிறுகதைகளையும் எழுதியிருக்கிறார்.
Be the first to rate this book.