துர்கேனிவின் இந்த மூன்று குறுநாவல்களும் ருஷ்ய இலக்கியத்திற்கு மூலச் சிறப்பு உள்ளவையாக வெகு காலமாகத் திகழ்ந்து வருகின்றன. இவை துர்கேனிவ் தன்மை நிரம்பப் பெற்றவை. அவருடைய மேதமையின் சிறந்த அம்சங்களை இவை பிரதிபலிக்கின்றன. ஆகையால் இந்த நூல்களை உள்ளக் கிளர்ச்சி இல்லாமல் படிப்பது இன்றளவும் முடிவதில்லை. இளம் வாசகர்கள் துர்கேனிவின் படைப்பை அறிமுகம் செய்துகொள்ள இந்தக் குறு நாவல்களிலிருந்தே தொடங்குகிறார்கள், மனித உணர்ச்சிகளின் தன்னிகரற்ற உலகை இவற்றில் காண்கிறார்கள். துர்கேனிவ் வருணித்துள்ள நிகழ்ச்சிகள் நம் காலத்துக்கு நூறு ஆண்டுகளுக்கும் முற்பட்டவை ஆயினும், நம் காலத்தவர்களையும் நேரடியாகப் பங்குகொள்ள வைக்கின்றன. ஏனெனில் என்றும் நிலைத்திருப்பவையும் அழிக்க முடியாதவையுமான, இயல்பான மனித உணர்ச்சிகளை இவை விவரிக்கின்றன.
- அர்தூர் தல்ஸ்தியகோவ்
Be the first to rate this book.