வேலூரின் அடையாளங்களாக கோட்டை, மற்றும் சிஎம்சி மருத்துவமனை போன்றவற்றை சொல்லும் நிலை மாறி, இப்போது விஐடி பல்கலைக்கழகம்-தான் முக்கிய அடையாளமாகத் திகழ்கிறது. சுதந்திரப் போராட்ட வரலாற்றில் முதன்முதலில் புரட்சி நடத்திய பெருமை வேலூருக்கு உண்டு. இப்போது அதே வேலூரில் கல்விப் புரட்சியை விஐடி ஏற்படுத்தி வருகிறது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவர்களும் விஐடியில் படிக்கின்றனர். ஆந்திரா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் ஆலமரமாய் விஐடி கிளை பரப்பி நிற்கிறது. இந்த ஆல விருட்சத்துக்கு விதை போட்ட பெருமை தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் அவர்களுக்கு உண்டு.
Be the first to rate this book.