ஆபிரிக்க முஸ்லிம்களின் படுக்கையறைக்குள் எட்டிப் பார்க்கும் நாவல் என சர்ச்சைக்குள்ளாமியிருந்த இந்த ஆபிரிக்க இஸ்லாமிய நாவலானது ஆசியப் பெண்ணான சீதா எனும் தமிழ்ப் பெயருடைய சிங்கள் எழுத்தாளரால் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தமை அந்தக் கால கட்டத்தில் பலராலும், பலவிதமான விமச்ச சனங்களுக்கு உள்ளாகியிருந்தது. இஸ்லாமியக் குடும்பங்களில் காணப்படும். ஆண்களின் பலதார மணம் இந்தக் கதையின் பிரதான கருவாக அமைந்திருக்கிறது என்றாலும் எழுத்தாளர் நேரில் சந்தித்த நைஜீரியப் பெண்ணொருந்தியின் உண்மைக் கதையே இவ்வாறு ஒரு நாவலாக எழுதப்பட்டிருக்கிறது. நாவலில் பலதார மணத்தை எதிர்க்கும் கருத்தை முன்வைக்காமல், கதாபாத்திரங்களினூடே அந்த வாழ்வியலை வாசகர்கள் கண் முன் எடுத்துக் காட்டி, தீர்மானத்தை வாசகர்களிடமே விட்டிருக்கிறார் எழுத்தாளர்.
Be the first to rate this book.