மனிதர்களை சில நம்பிக்கைகள்தான் வழிநடத்திச் செல்கின்றன என்பது எந்த அளவுக்கு உண்மையோ, அதே அளவுக்கு சில நம்பிக்கைகள் மனிதனை முடக்கிப்போடவும் செய்கின்றன என்பதை நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். நாம் செய்யும் நியாய_அநியாயங்களை யாரோ ஒருவர் தொடர்ந்து கவனித்துக்கொண்டிருக்கிறார் என்ற நம்பிக்கைதான் மனிதர்களை இன்னும் மனிதர்களாகவே வைத்திருக்கிறது. சில நம்பிக்கைகள் எப்போது, யாரால் தோற்றுவிக்கப்பட்டது என்று ஆராயப்புகுந்தால் விடை காண்பது மிக அரிது. நம்பிக்கைகள் இனம், மொழி, நாடு சார்ந்து வேறுபடுபவை. நம்பிக்கைகளை பின்பற்றத் தெரிந்த மக்களுக்கு அவற்றைத் தரம்பிரிக்கத் தெரியவில்லை என்றுதான் சொல்ல வேண்டி இருக்கிறது. சில நம்பிக்கைகள் காலாவதியாகிவிட்டவை; சில நம்பிக்கைகள் இன்று துளியும் பொருந்தாதவை. காலத்திற்குப் பொருந்தாத நம்பிக்கைகளுக்கு நாம் தொடர்ந்து உற்சாகமூட்டி வருகிறோம். இச்செயலை நாம் விட்டொழிக்க வேண்டும்.
Be the first to rate this book.