அலகாபாத்தில் கங்கையையும் யமுனையும்தான் நம் கண்களுக்குப் புலப்படுகின்றன. சரஸ்வதி நதி தெரிவதில்லை. கூடுதுறையில் காவிரியும் பவானியும்தான் நமக்குத் தெரிகின்றன. அமுத நதி தெரிவதில்லை. சரஸ்வதி நதியும், அமுத நதியும், இந்த நாவலின் நாயகி பவானியும் ஒன்றுதான்- மூன்றாம் நதிகள். பெங்களூர் போன்ற பெருநகரங்களில் உயர்ந்த கட்டிடங்களும், மென்பொருள் நிறுவனங்களும், கேளிக்கை விடுதிகளும், விலையுயர்ந்த கார்களும்தான் கண்களுக்குத் தெரிகின்றன. அதே பெருநகரில்தான் சேரிகளில் வசிக்கிறார்கள். பிச்சை எடுக்கிறார்கள். குப்பை பொறுக்குகிறார்கள். பழைய செய்தித்தாள்களைச் சேகரிக்கிறார்கள். தெருத்தெருவாக தின்பண்டங்களை விற்கிறார்கள். தள்ளுவண்டியில் தூங்குகிறார்கள். அவர்கள் சாதாரணக் கண்களுக்குப் புலப்படுவதேயில்லை. நாவலின் நாயகி பவானியைப் போல.
Be the first to rate this book.