பாரம்பரிய மருத்துவத்தை நோக்கி நவீன யுகம் தடம் மாறி வரும் காலக்கட்டத்தில் 'மூலிகை அகராதி'யின் வருகை அவசியானது;
ஆயிரத்திற்கும் மேற்பட்ட மூலிகைகளின் மருத்துவக் குணங்களும் அவற்றின் பயன்பாடுகளும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.
சித்த மருத்துவர் என்.கே. சண்முகம் பல தலைமுறைகளாக மரபு வழி மருத்துவத்தில் ஈடுபட்டிருந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்.
25 ஆண்டு காலம் சித்தமருத்துவராகவும் மூலிகை ஆராய்ச்சியாளராகவும் பணிபுரிந்தவர். டென்மார்க் நாட்டில் உள்ள சில ஆய்வகங்களுக்கு ஆலோசகராகவும் இருந்தவர்.
1989இல் இவர் வெளியிட்ட மூலிகைக் களஞ்சியம் என்ற தமிழ்&ஆங்கில நூலின் ஆங்கிலப் பகுதியை நீக்கிவிட்டு முற்றிலும் தமிழ்ப் பதிப்பாக வெளிவருகிறது இந்த மூலிகை அகராதி.
Be the first to rate this book.