கதைக்கும் கவிதைக்கும் இடையில் நகரும் திரைகளின் மொழி மூளையின் புதிய அடுக்குகளாயின. திரை வழி உருவான புதிய மொழிக்குப் பின் வடிவம் பெற்றவையே இன்றுள்ள நவீனத்துவ பின்நவீனத்துவப் பிரதிகளும் எதிர்ப் பிரதிகளும். பின்னோக்கிய பிரதிகளும் முன்னோக்கிய பிரதிகளும் இழையும் போதும் இடையுறும் போதும் புதிய மொழியுடன் சில சுருள்வழிப் புனைவுகள் உருவாகின்றன. பிரதிகளும் எதிர்ப்பிரதிகளும் இணைந்த ஒரு திரைப்பிரதியோ திரைக்கவிதையோ உருவாகும் போது அவை ஒன்றை ஒன்று கலைத்துக் கொண்டு உருமாறிய சில தடயங்களை மட்டுமே விட்டுச் செல்கின்றன. அத்தடயங்களைக் கொண்டு ஒரு புனைவையோ கவிதையையோ உருவாக்க முடியுமா? அவை திரையில் வரிகளாக மாறும் போது அதில் ஒலித்தடங்களையும் இசைத்தடங்களையும் இணைக்க முடியுமா?
Be the first to rate this book.