பெரும்பாலான மாணவர்கள், இரவுபகலாக மாய்ந்து மாய்ந்து படித்தும் தேர்வில் அவர்களால் அதிக மதிப்பெண்கள் வாங்கமுடியாமல் போகிறது. கஷ்டப்பட்டுப் படித்தும் நல்ல புத்திசாலியான குழந்தைகள் கூட பல சமயங்களில் தேர்வுகளில் தோல்வியடைய நேருகிறது. பெரியவர்களுக்கும் கூட, சில புத்தகங்களையோ செய்தியையோ எவ்வளவு ஊன்றிப் படித்தும் புரிந்துகொள்ள முடிவதில்லை. நன்றாகப் படித்தும், தேவைப்படும்போது சிலவற்றை மீண்டும் நினைவுக்குக் கொண்டுவர முடியவில்லை. ஏன்? மனிதர்கள் தம் மூளையில் மறைந்துள்ள அபரிமிதமான ஆற்றல்களை முழுமையாகப் பயன்படுத்தாததே இவற்றுக்குக் காரணம். மூளையின் ஆற்றல்களை முழுமையாகப் பயன்படுத்துவது எப்படி என்படிதச் சொல்லித் தருகிறது இந்த புத்தகம்.
உங்கள் மூளைக்குள் ஒளிந்திருக்கும் திறமைகளை வெளிக்கொண்டு வருவது எப்படி?
சிந்தினைத் திறன், கற்றல் செயல்பாடு ஆகியவற்றை மேம்படுத்திக் கொள்ள உதவும் வழிமுறைகள் யாவை?
உங்களுடைய படைப்பாக்கச் சிந்தனையையும் சிக்கல்களைத் தீர்க்கும் திறனையும் வளர்ப்பது எப்படி?
உங்கள் மூளையின் திறனை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வது எப்படி?
நினைவாற்றல் எப்படிச் செயல்படுகிறது? அதை உச்சத்துக்கு மேம்படுத்திக்கொள்வது எப்படி?
மன வரைப்படங்கள் (mind map) மூலம் கற்றலை எளிமையாக்குவது எப்படி?
எல்லாக் கேள்விகளுக்கும் தீர்வுகளைச் சொல்கிறார் உலகப் புகழ்பெற்ற சிந்தனையாளரான டோனி பூஸான். மூளையின் செயல்பாடு, கற்றல் முறைகள் ஆகியவற்றில் தலைசிறந்த ஆய்வளராக விளங்கும் இவரது புத்தகங்கள் 30க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. ‘மன வரைபடம்’ என்பதைக் கண்டுபிடித்த இவர், பிரைன் ஃபவுண்டேஷன், பிரைன் ட்ரஸ்ட் சாரிட்டி போன்ற பல அமைப்புகளை நிறுவி, செயல்பட்டு வருகிறார்.
Be the first to rate this book.