பெருந்தேவியின் மீளுருவாக்கம் அர்த்தத்தை மட்டும் முன்னிறுத்திச் செய்யப்பட்டிருக்கும் தமிழாக்கமல்ல. குரல், ஒலி, கவித்துவம், மொழிச்சிக்கனம் நிகழ்த்தும் அற்புதங்கள் இவற்றையும் தமதாக்கிக்கொண்டு வெளிப்பட்டிருக்கும் தமிழ் வசனங்கள் இவை. மொழி இங்கு உடலெனக் குவிந்து பேசும் பிரபஞ்சத்தின் ஒரு புள்ளியாய், அக்கமகாதேவியின் உடலைத் தற்பொழுதிற்கென மறைத்துக் காட்டும் கூந்தல் குழல்களாய், பரந்து விரிந்த வானாய், இடைவெளியின்றி நிறைந்திருக்கும் இறையைச் சட்டெனச் சுட்டிவிடும் தெளிவாய்த் துலங்கி மிளிர்கிறது.
Be the first to rate this book.