காதல் புகுந்த மனசு எப்போதும் கண்ணாடிப் பாதையில் பயணித்து பளிங்குப் பூக்களைத் தரிசிக்கும். சினிமாவின் உள்ளங்கைகளில் நிஜ காதல் ரேகைகளைத் தேடித்தேடி ஒப்பிடுகிறார். ‘சினிமாவில் இருப்பதைப் போல, நமக்குள்ளும் ஒரு எடிட்டர் இருந்தால் வாழ்க்கை அழகாகிவிடும்’ என்கிற அவரது ஒவ்வொரு கட்டுரையிலும் சிறுகதைத் தன்மையை விதைக் கிறார். சினிமாவில் காணும் பிம்பங்களில் தங்களை இணைத்துப்பார்க்கும் மனசு எல்லோருக்கும் உண்டு, அதை வர்ணக் குடையாக புத்தகம் முழுக்கவும் விரித்துப் பிடிக்கிறார். ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ ஜெஸ்ஸியுடன் கவுதம் என்கிற இளைஞனின் வாழ்வில் குறுக்குப் பயணம் மேற்கொண்ட ப்ரீத்தி என்கிற பெண்ணை ஒப்பிட்டு நிறைய நிறைய கேள்விகளை எழுப்புகிறார். நிஜத்துக்கும் நிழலுக்கும் இடையேயான அழகானதொரு உணர்வுப் பாலம்தான் இந்த ‘மான்டேஜ் மனசு’. படிக்க சுவாரஸ்யமான நடையில் எழுதப்பட்ட இப் புத்தகத்தை இளைஞர்கள் உள்பாக்கெட்டில் வைத்துகொள்ளலாம்.
- மானா பாஸ்கரன்
Be the first to rate this book.