பேரா.சோ.மோகனா கிராமத்தில் எளிய குடும்பத்தில் பிறந்து, கல்வியாலும், கடின உழைப்பாலும் முன்னேறிய முதல் தலைமுறை பட்டதாரி. பழநியாண்டவர் ஆண்கள்
கல்லூரியில் 38 ஆண்டுகள், விலங்கியல் துறையிலும், பொறுப்பு முதல்வராகவும், பணியாற்றி உள்ளார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மேனாள் தலைவராக இருமுறை இருந்துள்ளார். கடந்த 35 ஆண்டுகளாக, தமிழ்நாடு அறிவியல் இயக்க செயல்பாட்டாளர். BGVS அமைப்பின் செயற்குழு உறுப்பினர். அகில இந்திய அறிவியல்கூட்டமைப்பின் பொதுக்குழு உறுப்பினர். சமதாவின் தேசிய கமிட்டி உறுப்பினர். தென்னிந்திய சமம் ஒருங்கிணைப்பாளர்.
பணிநிறைவுக்குப் பின்னர் இந்திய தொழிற்சங்க மையம் & தமுஎகச வில் ஓய்வின்றி பணியாற்றி வருபவர். சிஐடியுவின் மாநிலக்குழு உறுப்பினர். சமூக செயல்பாட்டாளர். வானவியல், பயணங்கள், காமிரா இவரது பொழுதுபோக்கு. எழுத்தாளர். வானவியல், விலங்கியல், அறிவியல், வரலாறு, சமூக நீதி, பெண்ணியம் என பல துறைகளில் இவரது நூல்கள் வெளிவந்துள்ளன. ஏராளமான மனிதர்களின் அன்பை சம்பாதித்துள்ளார். புற்று நோயிலிருந்து மீண்டு, புற்று நோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். 72 வயதில் புற்று நோய் பற்றிய ஆராய்ச்சி படிப்பை மேற்கொண்டுள்ளார். அறிவியல் பரப்புரைக்காக தமிழ் நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் விருதைப் பெற்றுள்ளார். சிறார்களுக்கு எழுதிய புத்தகங்களுக்காக, கடலூர் தேசிய குழந்தைகள் மற்றும் புத்தக திருவிழா விருது உட்பட பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கிறார். 75 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் ஹாலி வால் நட்சத்திரம் போன்ற அரிய மனிதர் மோகனா. சுவாரசியமும், நெகிழ்ச்சியும் கொண்ட தனிப்பட்ட வாழ்க்கையையும், உத்வேகம் அளிக்கக்கூடிய இயக்கப் பணி வாழ்க்கையையும், இந்நூலில் அழகாக சொல்லி இருக்கிறார்.
Be the first to rate this book.