ஜனநாயகரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தலைவர், உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தை சர்வாதிகாரம் மற்றும் சகிப்புத்தன்மையின்மையை நோக்கி எப்படி வழிநடத்தினார் என விளக்கும் அதிர்வூட்டும் எழுத்து.
கடந்த இரு பத்தாண்டுகளாக, இந்து தேசியவாதம் தேசிய ஜனரஞ்சகவாதத்தின் ஒரு வடிவத்துடன் இணைந்து முதலில் குஜராத்திலும் பின்னர் இந்தியாவில் பெருமளவிலும் தேர்தல்களில் ஆற்றல்மிக்கதாக திகழ்வதை நிரூபித்துவருகிறது. இந்த மாற்றத்தைச் செயல்படுத்திய ஒரு முக்கிய மனிதர்: நரேந்திர மோடி. அவர், இந்தியர்களை ஒருபக்கம் வளர்ச்சிக்கான உறுதிமொழியின் மூலமும் மறுபக்கம் இன-மத அடிப்படையில் துருவப்படுத்துவதன் மூலமும் தூண்டி, பெரிதும் பிரத்யேகமான அரசியல் பாணி ஒன்றை வளர்த்தெடுத்து வந்துள்ளார். அவரது தேசிய ஜனரஞ்சகவாத்தின் குறிப்பிட்ட இரு அம்சங்களும், பல்வேறுபட்ட தகவல் தொடர்பு வழிமுறைகள் மூலம் பொதுவெளியை நிறைத்துவருகிறது. கிறிஸ்டோப் ஜாஃப்ரெலோ, இந்தியா முழுவதும் மேற்கொள்ளப்பட்ட அசலான நேர்காணல்களின் மூலம், மோடியின் அரசாங்கம் இந்தியாவை ஒரு புதிய வடிவிலான ஜனநாயகத்தை நோக்கி நகர்த்தியது எனக் காட்டுகிறார்.
Be the first to rate this book.