மோடி அளவுக்கு வேறு எந்த அரசியல்வாதிக்கும் இந்தியா முழுதும் எதிர்ப்பு இருந்ததில்லை. ஆனால் அதே அளவுக்கு குஜராத்தில் மோடிக்கு ஆதரவு உள்ளது. இதற்குக் காரணம் என்ன? குஜராத்தில் நரேந்திர மோடி கொண்டுவந்திருக்கும் வளர்ச்சி சார்ந்த மாற்றங்கள்தான் காரணம் என்று எடுத்துக்காட்டுகளுடன் சொல்கிறார் நூலாசிரியர் சரவணன். அனைத்து அரசியல்வாதிகளும் ‘மின்சாரம், சாலைகள், குடிநீர்’ என்பதை அரசியல் கோஷங்களாக மட்டுமே வைத்துள்ள நிலையில் அதனைக் கடந்த பத்தாண்டுகளில் மிகச் சிறப்பாகத் தன் மாநிலம் முழுதும் செயல்படுத்தியுள்ள ஒரே முதல்வர் மோடி மட்டுமே என்று தைரியமாகச் செல்லமுடியும். இந்தியா எப்போதும் பின்தங்கிய நிலையிலேயேதான் இருக்கவேண்டுமா, நம் நாட்டுக்கு விடிவு காலம் எப்போது வரும் என்று மனம் வெதும்பிப்போயிருக்கும் பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் இப்போது மோடியின் பக்கம் திரும்பியிருக்கிறார்கள். குஜராத்தில் ஒவ்வொரு துறை-யிலும் கடந்த பத்தாண்டுகளில் என்ன மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன, அவற்றால் மக்களின் வாழ்க்கைத்தரம் எந்த அளவுக்கு முன்னேற்றம் அடைந்துள்ளது, நிர்வாகம் எந்த அளவுக்கு மக்கள் நலத்தை முன்வைத்து இயங்குகிறது, வளர்ச்சி எப்படி அடித்தட்டு மக்கள் வரை அடைந்துள்ளது என்று பலவற்றையும் புள்ளிவிவரங்களுடன் விளக்குகிறது இந்தப் புத்தகம். இந்தத் திட்டங்களும், மோடி போலவே, இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்குமான ஒரு முன்மாதிரி.
Be the first to rate this book.