முத்தலாக் தடைச் சட்டம் நிறைவேற்றப்பட்டதன் மூலம் முஸ்லிம் பெண்களுக்கு இழைக்கப்பட்டு வந்த ஒரு வரலாற்றுத் தவறு சரி செய்யப்பட்டுள்ளது என்று 2019ஆம் ஆண்டு இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டபோது பிரதமர் மோடி பெருமிதம் பொங்க தெரிவித்தார்.
இது பாலின சமத்துவத்திற்கு கிடைத்த வெற்றி என்றும் அவர் குறிப்பிட்டார். மோடி ஆட்சிக்கு வந்து எட்டு ஆண்டுகள் கடந்த பின்பும் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதாவை நிறைவேற்ற ஒரு துரும்பைக்கூட கிள்ளிப்போடாதவர் பாலின சமத்துவம் பற்றி பசப்புவது அவக்கேடானது.
Be the first to rate this book.