இந்திய கம்யூனிச இயக்கத்தின் பிதாமகன், ஐரோப்பாவிற்கு வெளியே மெக்ஸிகோவில் – முதல் கம்யூனிஸ்ட் கட்சி கட்டப்பட்டதில் முதன்மைப் பங்கு வகித்தவர். பெஷாவர், கான்பூர், மீரட் எனத் தொடர்ந்த கம்யூனிஸ்ட்களுக்கு எதிரான சதி வழக்குகளில் மையப் பாத்திரம், மாமேதை லெனின், ஜவஹர்லால் நேரு, சுபாஷ் சந்திரபோஸ், பெரியார் எனப் பலராலும் பெரிதும் மதிக்கப்பட்டவர் என இன்னும் எவ்வளவோ சொல்லலாம்.
அவரது பிற்கால அரசியல் நிலைபாடுகள் விவாதத்திற்குரியவை தான் என்றாலும் மறக்கக்கூடாத ஆளுமை. 21 ஆம் நூற்றாண்டு தரும் வெளிச்சத்தில் மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டியவற்றில் அவரது வாழ்க்கை சிந்தனை ஆகியவையும் அடங்கும்.
Be the first to rate this book.